யாழ்.கோப்பாய் பகுதியில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோப்பாய் காவல் துறை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஊரெழு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கு மேற்பட்ட போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக காவல் துறையினர்ர் தெரிவித்துள்ளனர். 

Von Admin