வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள பற்றைக் காணியில் வைத்து திருட்டு மாடுகள் இரண்டை சட்டத்துக்குப் புறம்பாக இறைச்சிக்காக வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்று (17) இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சுழிபுரத்தைச் சேர்ந்த 36 மற்றும் 40 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 40 கிலோ கிராம் மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Von Admin