புன்னாலைக்கட்டுவன் தெற்கு ஆயாக்கடவை சித்திவிநாயகர் ஆலய சுபகிருது புதுவருடப் பிறப்பு விசேட பூசை வழிபாடு நேற்று முன்தினம் வியாழக்கிழமை(14.4.2022) காலை-06 மணி முதல் சிறப்பாக நடைபெற்றது.

அபிஷேகம், பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து விநாயகப் பெருமான் மூஷிக வாகனத்தில் உள்வீதி உலா வரும் திருக் காட்சியும் இடம்பெற்றது.

இதேவேளை, மேற்படி விசேட பூசை வழிபாட்டில் கலந்து கொண்ட அனைத்து அடியவர்களுக்கும் ஆலய ஆதீனகர்த்தா பா.சுந்தரராஜ சர்மாவால் கைவிசேடம் வழங்கி வைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.