தமிழகத்தைச் சேர்ந்தவர் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் (18).

இவர் 83வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக கவுகாத்தியிலிருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார்.

அப்போது, எதிரே வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் டிவைடரை தாண்டி வந்து கார் மீது மோதியது. இதில், கார் டிரைவர் மற்றும் தீனதயாளன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மற்ற 3 பேரும் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அங்கிருந்தவர்கள் மீட்டு ஷில்லாங் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீனதயாளனின் உடல் நாளை காலை சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட உள்ளது.

தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்கள் வென்றுள்ள தீனதயாளன், வரும் 27ம் தேதி ஆஸ்திரியாவின் லின்ஸில் தொடங்க உள்ள சர்வதேச போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தலைவர் துஷ்யந்த் சவுதாலா இரங்கல் விஸ்வா தீனதயாளனுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், அவரது குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.    

Von Admin