எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை அடுத்து 35 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்ட பேருந்து பயணக் கட்டணம், இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

இம் முறை எரிபொருளின் விலை பாரிய தொகையால் அதிகரிக்கப்பட்டதால் 35 சதவீதத்தால் பேருந்து பயணக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, குறைந்த பட்ச பேருந்து பயணக் கட்டணம் 27 ரூபாவாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த கட்டண அதிகரிப்பு இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளுக்கும் பொருந்தும் என அவர் குறிப்பிட்டார்.

பேருந்து கட்டணம் அதிகரித்துள்ள போதிலும் தொடருந்து கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என மேலும் அவர் தெரிவித்துள்ளார். 

Von Admin