ஏழாலை’ எனும் பெயர் உருவாகக் காரணமான ஏழு ஆலயங்களில் காவல் தெய்வமாக விளங்கும் பிரசித்திபெற்ற ஏழாலை பெரியதம்பிரான் ஆலயக் கொடியேற்ற உற்சவம் இன்று புதன்கிழமை(20.4.2022) இரவு-09.30 மணிக்கு தொன்றுதொட்டு நிலவி வரும் பாரம்பரிய முறைப்படி இடம்பெற்றது.

இவ்வாலயக் கொடியேற்ற உற்சவத்தைத் தொடர்ந்து அடியவர்கள் எவரும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை ஆலய வளாகத்திற்குள் பிரவேசிக்க கூடாது என்பது இவ்வாலய நியதியாக இருந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை இரவு நெய்விளக்கேற்றி வழிபாடு இடம்பெற்ற பின்னரே அடியவர்கள் ஆலய வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியும்.

எதிர்வரும்-27 ஆம் திகதி புதன்கிழமை நள்ளிரவு-12 மணியளவில் தீ மிதிப்புக்கான தீமூட்டல் நடைபெறும். மறுநாள் 28 ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலை-04 மணிக்கு வழுந்துப் பானை வைத்தலுடன் இவ்வாலய வருடாந்தப் பொங்கல் ஆரம்பமாகும். தொடர்ந்து அன்றையதினம் முற்பகல்-10.30 மணிக்கு கொடித்தம்ப பூசையும், நண்பகல்-12 மணிக்குத் தீ மிதிப்பு வைபவமும், பிற்பகல்-01 மணிக்குஅடியவர்களுக்கு அன்னதானமும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து அடுத்தமாதம்-4 ஆம் திகதி புதன்கிழமை கொடியிறக்கத்துடன் உற்சவம் இடம்பெறும்.

Von Admin