2022 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அரசப் பாடசாலை பரீட்சைகளுக்கான திகதிகளை கல்வி அமைச்சி அறிவித்துள்ளது.

அந்த வகையில், க.பொ.த உயர்தரம், க.பொ.த சாதாரண தரம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகளை கல்வி அமைச்சர் பத்திரன அறிவித்தார்.

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி தொடக்கம்  ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Von Admin