• Mi. Sep 11th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மீண்டும் கட்டாயமாக்கபட்டது முகக்கவசம் அணிதல்!

Apr 22, 2022

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் பெருந்தொகையான மக்கள் ஒன்றுகூடுவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற கட்டுப்பாட்டை கடந்த 18ஆம் திகதி முதல் நீக்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. இந்த நிலையில், அந்த தீர்மானம் தற்போதைய நிலைமையில் ஏற்புடையதல்ல என பல்வேறு தரப்பினரும் தெரிவித்திருந்தனர்.

எனவே, இந்தத் தீர்மானத்தை மீளாய்வுக்கு உட்படுத்துமாறு நிபுணர் குழுவுக்கு சுகாதார அமைச்சர் ஆலோசனை வழங்கியிருந்தார்.

அதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட பரிசீலினைகளை அடுத்து பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed