யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை கடும் மழை பெய்துள்ளது.

இன்று காலை யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்துள்ளதுடன் இன்று முற்பகல்-11.10 மணி முதல் பல பகுதிகளிலும் கடும் மழை பெய்துள்ளது. வலிகாமத்தின் பல பகுதிகளிலும் முற்பகல்-11.45 மணிக்குப் பின்னர் கடும் மழை பொழிந்தது.

இந்த மழைவீழ்ச்சி பல இடங்களிலும் இடையிடையே விட்டு விட்டுப் பொழிந்தமையையும் அவதானிக்க முடிந்தது.

திடீர் மழையால் வீதியால் பயணித்தவர்கள் சிரமங்களை எதிர்கொண்டதுடன், ஆங்காங்கே ஒதுங்கி நின்றமையையும் அவதானிக்க முடிந்தது.

இதேவேளை, கடும் மழையால் வலிகாமம் பகுதிப் புகையிலைச் செய்கையாளர்கள் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Von Admin