கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நாளுக்கான நாளாந்த பங்குச் சந்தை பரிவர்த்தனை முழுவதுமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதன்படி S&P SL20 சுட்டெண் 10% விட குறைந்ததன் காரணமாக பங்குச் சந்தை பரிவர்த்தனை நடவடிக்கைகளே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பங்குச் சந்தையின் நாளாந்த பங்குச் சந்தை பரிவர்த்தனை முற்பகல் 10.31 மணிக்கு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் முற்பகல் 11.01 மணிக்கு பங்குச் சந்தை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

இதனையடுத்து மீண்டும் பங்குச் சந்தை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை கடந்த திங்கட்கிழமை (18) முதல் 5 நாட்களுக்கு கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Von Admin