மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் தனது பிறந்தநாளில் உயிரிழந்துள்ளார். 
உயிரிழந்த இளைஞனும் மற்றுமொரு இளைஞனும் நேற்றைய தினம் திங்கட்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்ற போது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது.

அதில் பயணிந்த யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் பகுதியை சேர்ந்த குணசேகரன் நிக்சன் (வயது 22) எனும் இளைஞன் உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த ரவிகரன் கனிஸ்டன் (வயது 20) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


உயிரிழந்த இளைஞனின் பிறந்தநாள் நேற்றைய தினமாகும். அந்நாளில் இருவரும் மோட்டார் சைக்கிளில் அராலி – வல்லை வீதியில் பயணித்த வேளை , தெல்லிப்பழை அம்பனை சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக இருந்த வேலி தூணுடன் மோதி விபத்துக்கு உள்ளானது. சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Von Admin