தஞ்சாவூர் அருகே தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் இரு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜைக்கான சித்திரை திருவிழா தேரோட்டம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை 3 மணியளவில் களிமேடு பகுதியில் உள்ள பூதலூர் சாலையில் மக்கள் தேர் வடம்பிடித்து இழுத்து வந்தபோது அங்கு மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பி மீது தேர் உரசியததனால் தேரின் மீது மின்சாரம் பாய்ந்ததினால் இவ்வாறு உயிாிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

2 சிறுவர்கள் உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அவா்களினல் நான்கு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

Von Admin