• Mi.. Nov. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.

Apr. 28, 2022

பளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட புதுகாட்டு சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த சம்பவமானது இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

புதுகாட்டுச்சந்தியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளை மருதங்கேணி இருந்து புதுகாட்டு நோக்கி வந்து கொண்டிருந்த வாகனம் மோதியுள்ளது.

இதில் உடுத்துறை வடக்கு தாளையடியை சேர்ந்த நாகேந்திரன் ஜெகன் என்பவரே பலியாகியுள்ளார்.

குறித்த பகுதியில் சற்று நேரம் அமைதியின்மை ஏற்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.