தன்னை ஒரு காவல்துறைஅதிகாரி என தெரிவித்த தமிழ் இளைஞர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மார்கம் நகரை சேர்ந்த 25 வயதான ஜெனிசன் ஜெயக்குமார் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்கம் மசாஜ் நிலையமொன்றில் இலவச பாலியல் சேவைக்கான அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டநிலையில், அவர் தன்னை ஒரு காவல்துறை அதிகாரி என அடையாளப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த சம்பவம் கடந்த 8ம் திகதி நிகழ்ந்ததாக கூறப்படும் நிலையில், கைது செய்யப்பட்டவர் காவல்துறையில் பணியாற்றவில்லை என்பதை யோர்க் பிராந்திய காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இனிவரும் காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக காவல்துறையினர் கைது செய்யப்பட்ட நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.