தூத்துக்குடியில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் அண்ணா நகர் பகுதியில் வசித்து வந்தவர்கள் முத்துராமன் – காளியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு கார்த்திகா என்ற பெண் உள்ள நிலையில் கடந்த ஆண்டு அவருக்கு தம்பதியினர் திருமணம் செய்து வைத்துள்ளனர்

தற்போது கர்ப்பமான கார்த்திகாவிற்கு வளைகாப்பு நடத்தி பின்னர் தங்களது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இரவு உறங்கி கொண்டிருந்தபோது திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் கர்ப்பிணி பெண்ணான கார்த்திகா மற்றும் அவரது தயார் காளியம்மாள் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த முத்துராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Von Admin