கின்னஸ் உலக சாதனைகளால் உலகின் மிக உயரமான பெண்மணி என்று பெயர் பெற்ற துருக்கியை சேர்ந்த ருமேசா கெல்கி கூடுதலாக மூன்று கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார்.

இதன்மூலம், துருக்கி பெண் மொத்தம் ஐந்து கின்னஸ் சாதனைகளை படைத்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பிப்ரவரி 2022-ம் ஆண்டில், வாழும் பெண்ணின் நீளமான விரல் 11.2 செ.மீ (4.40 அங்குலம்), உயிருள்ள ஒருவரின்  (பெண்) மீது  மிகப்பெரிய கைகள் பிரிவில் அவரது வலது கை 24.93 செ.மீ (9.81 அங்குலம்) மற்றும்ற இடது கை அளவு 24.26 செ.மீ (9.55), உயிருடன் இருக்கும் நபர் (பெண்): 59.90 செ.மீ (23.58 அங்குலம்) என்கிற பிரிவுகளின் கீழ் ருமேசியா கெல்கி கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார் . அவரது உயரம் 215.16 செ.மீ அதவாது 7 அடி 0.7 அங்குலம் ஆகும்.

மேலும், யூடியூபில் உலக கின்னஸ் சாதனை வெளியிட்ட வீடியோ ஒன்றில் ருமேியா கெல்கி கூறியதாவது:-

சிறுவயதில் நான் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டேன். ஆனால் உயரமாக இருப்பதன் நன்மைகளில் ஒன்று நீங்கள் கின்னஸ் உலக சாதனைகளைப் படைக்க முடியும்.

நான் 2014-ம் ஆண்டில் ஒரு இளம்பெண்ணாக முதல் கின்னஸ் சாதனை பெற்றேன். அதன் பிறகு அதைக் கொண்டு வக்கீல் காரணங்களுக்காகப் பயன்படுத்துகிறேன். அதனால்தான் நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.