யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் உள்ள வீட்டின் அயலில் உள்ள கோவிலுக்கு அருகாமையில் வீழ்ந்து கிடந்த சிறுவன் ஒருவரை பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் துன்னாலை குடவத்தைப் பகுதியைச் சேர்ந்த மகிந்தன் நிறோஜன் (வயது-8) என்பவராவார்.

வீட்டில் இருந்து வெளியே சென்ன சிறுவன் அப்பகுதியில் உள்ள ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வீதியில் வீழ்த்து கிடந்ததை அடுத்து அவரை மீட்டு வந்து பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

மரண விசாரணைக்காகவும், பிரேத பரிசோதனைக்காகவும் சடலம் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Von Admin