கீரிமலையைப் பிறப்பிடமாகவும் ஈவினை – புன்னாலைக்கட்டுவனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கெங்காதரக் குருக்கள் விஜயலக்ஷ்மி (ஜெயா அம்மா) (06.05.2022) – வெள்ளிக்கிழமை அன்று இரவு கற்பகனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற பிரம்மஶ்ரீ ராமையர் – காமாக்ஷ்சி அம்பாள் தம்பதிகளின் அன்புப் புதல்வியும் பிரம்மஶ்ரீ தியாகராஜ ஐயர் கெங்காதரக் குருக்களின் ( பிரதமகுரு, ஈவினைக் கற்பக விநாயகர் ஆலயம் / குமரன் சோதிட ஆய்வகம், ஈவினை) அன்பு மனைவியும்.

காலஞ்சென்ற பிரம்மஶ்ரீ தியாகராஜா ஐயர் – பாலாம்பிகை அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் பத்மநாத சர்மா (அமெரிக்கா), காலஞ்சென்ற ரங்கநாயகி நடேசன் (இந்தியா), காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் (இந்தியா), சீதாலக்ஷ்மி பத்மநாதன் (கனடா), காலஞ்சென்ற பத்மநாத சர்மா (இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னார், பிரம்மஶ்ரீ சர்வேஸ்வரன் சர்மா (விரிவிரையாளர், யாழ். பல்கலைக்கழகம்), பிரம்மஶ்ரீ கமலேஸ்வரன் சர்மா (அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராமய அபிவிருத்தித் திணைக்களம்), பிரம்மஶ்ரீ பாலேஸ்வரக் குருக்கள் (பிரதமகுரு, ஈவினை கற்பக விநாயகர் தேவஸ்தானம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சரண்யா, ஶ்ரீவித்யா (ஆசிரியர்), மிதுஷா ஆகியோரின் அன்பு மாமியாரும் தேன்மொழி, ராஜாராம், பூங்குழலி, நிலவெழிலி, மானக்ஷரா ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும் வைத்தியக் கலாநிதி ஞானசேகர ஐயர் – ஞானலக்ஷ்மி தம்பதிகள் (ஞானம் சஞ்சிகை), காலஞ்சென்ற பிரம்மஶ்ரீ வைத்தீஸ்வர ஐயர் – லலிதாம்பாள் தம்பதிகள், பிரம்மஶ்ரீ சாமிநாத ஐயா் – நிர்மலா (வங்கி முகாமையாளர், திருகோணமலை) தம்பதிகளின் மைத்துனியுமாவார்.விஜயலக்ஷ்மி அம்மாவின் இறுதிக் கிரிகைகள் ஈவினை கற்பக விநாயகர் தெற்கு வீதியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நாளை (07.05.2022) சனிக்கிழமை இடம்பெற்று தகனக் கிரியைக்காக மாலை 4:00 மணிக்கு ஈவினை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

முகவரி:

ஈவினை கற்பகப் பிள்ளையார் வீதி,

ஈவினை, புன்னாலைக்கட்டுவன்

தகவல்

பிரம்மஶ்ரீ தியாக கெங்காதரக்குருக்கள் (கணவர்) மற்றும் பிள்ளைகள்