முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி செல்வபுரம் பகுதியின் A9 வீதியில், வைத்தியர் ஒருவரின் ஜீப் ரக வாகனம் விபத்துக்குள்ளாகி உள்ளது.

இடம்பெற்ற விபத்தில், வைத்தியருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

முறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த ஜீப் ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதி அருகில் உள்ள மரங்களுடன் பலமாக மோதியுள்ளது.

குறித்த வைத்தியர் அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்றி வருபவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்