ஊர்காவற்துறை – வேலணை, சரவணை பகுதியில் கிணற்றுக்குள் விழுந்த 11 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் ரூபன் ஜதுசா என்ற 11 வயதுச் சிறுமியே  உயிரிழந்துள்ளார்.

வீட்டில் இருந்தவர்கள் பக்கத்து வீட்டுக்கு சென்ற நேரம் சிறுமி நீராடுவதற்காக கிணற்றடிக்கு சென்றுள்ளார்.

இதன்போதே கால் இடறி கிணற்றுக்குள் விழுந்து இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சிறுமியை கிணற்றுக்குள் இருந்து மீட்டு ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போது, சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரேத அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Von Admin