• Do.. Mai 1st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ். உடுவில் பகுதியைச் சேர்ந்த சிறை கைதி திடீர் மரணம்

Mai 7, 2022

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்தன.

அம்மன் கோவில் வீதி உடுவில் பகுதியைச் சேர்ந்த யோகராசா ஜெயக்குமார் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

மதுபோதையில் குடும்பத் தகராறில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவர் சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, கடந்த 24ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் நேற்று சுகவீனம் காரணமாக சிறைச்சாலை அதிகாரிகளினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், காலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed