மீசாலை தட்டான்குளம் பிள்ளையார் ஆலயத்தின் பூசகரின் பணப் பையை பறித்துக்கொண்டு இளைஞர்கள் இருவர் தப்பி ஓடியுள்ளனர்.

மீசாலையில் உள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றிற்கு நித்திய பூசையில் ஈடுபடும் பூசகர் மற்றுமோர் ஆலயத்திற்கும் தினப் பூசைக்காக சென்று வருவது வழமையாகும்.

இவ்வாறு பூசையில் ஈடுபடும் ஆலயத்தின் நாளாந்த வருமானமும் மாத வேதனமாக 25 ஆயிரத்தையும் தனது பையில் வைத்துக்கொண்டு மீசாலை பிள்ளையார் ஆலயத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து ஆலயத் திறப்பை எடுத்த சமயம் ஓர் இளைஞர் கைப் பையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடினர்.

இது தொடர்பில் பூசகர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.