யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பூம்புகார் கடல் மற்றும் மண்கும்பான் சாட்டி கடல் ஆகியவற்றில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர். அரியாலை பூம்புகார் கடலில் நீராடிய ஞானகாந்தன் ஜெயமதன் (வயது 36) என்பவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

அதேவேளை மண்கும்பான் சாட்டி கடலில் நண்பர்களுடன் நீராட சென்ற அரியாலையை சேர்ந்த இராசரத்தினம் கணேசராசா (வயது 46) என்பவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இதனிடையே கிளிநொச்சி இரணைமடு குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்ட கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மயூரன் (வயது 22) என்பவர் குளத்தில் தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்துள்ளார். 

Von Admin