நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று காலை முதல் பதற்ற நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் காவல்துறை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்தே நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று முதல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியினுள் மதுபானசாலைகள் திறக்கப்படமாட்டாது.

Von Admin