கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகளை ஒத்திவைப்பது தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

அதன்படி க.பொ.த சாதாரணதர பரீட்சைகளை ஒத்திவைக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அறிவிக்கபட்டுள்ளது. 

இந்த விடயத்தை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

அத்துடன் குறித்த பரீட்சைகள் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2021ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான நேர அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் 23ஆம் திகதி சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி நிறைவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது