• Di. Dez 3rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையில் மீ்ண்டும் 16 மணித்தியாலங்கள் ஊரடங்கு நடைமுறை

Mai 12, 2022

இலங்கையில் மீண்டும் 16 மணித்தியாலங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும், இன்று பிற்பகல் 2 மணி முதல்  பொலிஸ்  ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் போடப்பட்ட ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணி வரை நடைமுறையில்  இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துமூல அனுமதியின்றி, பொதுச்சாலை, தொடருந்து பாதை, பொதுப்பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லையென ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஏலவே நாடு முழுவதும் நடைமுறையில் இருந்த  ஊரடங்கு சட்டம் இன்று காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தளர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed