க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான நுழைவுச் சீட்டு விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நுழைவுச் சீட்டுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் முன்பதிவு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் ஊரடங்குச் சட்டம் காரணமாக நுழைவுச் சீட்டு விநியோகம் தாமதமாகியுள்ளதாக தபால் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பரீட்சைக்கான நுழைவுச் சீட்டு விநியோகம் எதிர்வரும் திங்கட்கிழமையுடன் நிறைவடையத் திட்டமிடப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.