டெல்லியில் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள வணிக கட்டடத்தில் இன்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதொடர்பாக டெல்லி தீயணைப்பு சேவை துணை தலைமை தீயணைப்பு அதிகாரி சுனில் சவுத்ரி கூறுகையில், “4 மாடி வணிகக்கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 26 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 70 பேர் மீட்கப்பட்டுள்ளனர்”இதில் 40 பேர் கடும் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக டெல்லி தீயணைப்புத் துறைத் தலைவர் அதுல் கார்க் கூறுகையில், தீ தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும், மீட்புப் பணிகள் இன்னும் தொடர்ந்து நடந்து வருவதாகவும், டெல்லி தீயணைப்பு சேவைகள் 27 தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளன என்றும் கார்க் கூறினார்.

இந்த துயர சம்பவத்திற்கு இந்திய அரச தலைவர், பிரதமர் மோடி ஆகியோர் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.   

Von Admin