யாழில் பெருமளவு போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மல்லாகத்தைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இன்று முற்பகல் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து 300 போதை மாத்திரைகள் மற்றும் 2 கிராம் ஹெரோயின் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.