கனடாவில் தமிழர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடா – மிசிசாகாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 35 வயதான சுரேஷ் தர்மகுலசிங்கம் என்பவர் வாகனத்தில் மோதியிருந்தார். எனினும், பாதிக்கப்பட்டவருக்கு எவ்வித உதவியும் வழங்காமல் வாகனத்தின் சாரதி சம்பவ இடத்தில் நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

சுரேஸ் தர்மகுலசிங்கம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஒரு வாரத்தின் பின்னர் உயிரிழந்துள்ளார்.

லூக் கான்க்லின் (38), இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையைத் தொடர்ந்து டொராண்டோ காவல்துறையினரால் குற்றம் சாட்டப்பட்டது லூக் கான்க்ளின் ஜூலை 25 அன்று நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.