இலங்கையில் கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக எதிர்வரும் 20ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 
 
பரீட்சை முடிந்து சகல பாடசாலைகளும் ஜூன் மாதம் 6 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
 
கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை திட்டமிட்டவாறு எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு பரீட்சைகள் திணைக்களம் ஏற்பாடுகளை மேற் கொண்டுள்ளது.
 
பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்ய முடியும எனவும் திருத்தங்கள் தேவையாயின் இணையவழியில் மேற்கொள்ள முடியும் எனவும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.