வடமராட்சி, வல்லை முனியப்பர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டவரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது.

நேற்று (15) மதியம் இந்த சம்பவம் நடந்தது.

பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற ஒருவர், வல்லை முனியப்பர் ஆலயத்தில் தரித்து, வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார். மோட்டார் சைக்கிள் திறப்பை எடுக்காமல் சென்றுள்ளார்.

ஆலய முகப்பில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு. வழிபாட்டில் ஈடுபட்டு விட்டு திரும்பி வந்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருந்தது.

இது தொடர்பில் நெல்லியடி பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.

Von Admin