• Do. Sep 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் வீசும் கடும் காற்றினால் முதியவர் உயிரிழப்பு

Mai 19, 2022

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வீசும் கடும் காற்றினால் வீட்டின் முன் நின்ற பட்ட தென்னைமரம் முறிந்து வீழ்ந்ததில் அதன் கீழ்  சிக்கிக்கொண்ட முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வண்ணார்பண்ணை முருகமூர்த்தி வீதியில் இன்றைய தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஏகாம்பரநாதன் (வயது-80 ) என்ற 2 பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார்.

அவர் தனது வீட்டில் மதியம் சாப்பிட்டுவிட்டு அலைபேசி கதைத்துகொண்டு வீட்டு முற்றத்தில் கதிரையில் இருந்தபோது அவர் மீது பட்ட தென்னை மரம் காற்றுக்கு அடியோடு சரிந்து வீழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed