வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இரண்டில் மாத்திரமே டீசல் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை காணப்படுவதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்படுகின்றது.

நகர மத்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் வவுனியா மன்னார் சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலேயே டீசல் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்று அதிகாலையிலிருந்து வாகனங்கள் வரிசையில் காத்திருந்து டீசலை பெற்று வரும் நிலையில் விவசாய தேவைகளுக்காகக் கொள்கலன்களிலும் டீசலை பெறப் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல் இல்லா நிலையில் மோட்டார் சைக்கிள் பாவனையாளர்கள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் பெரும் துன்பத்திற்குள்ளாகியுள்ளனர்.

Von Admin