• Mo. Dez 9th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கோப்பாயில் அதிகாலையில் தொடரும் வழிப்பறி.

Mai 20, 2022

கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அதிகாலை வேளைகளில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலின் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்து செல்வதாகவும், அதனால் பலரும் பாதிக்கப்பட்டு வருதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பில் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் காவல்துறையினா் நடவடிக்கை எடுப்பதில் அக்கறையின்றி காணப்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்


கோப்பாய் வீதியில் அதிகாலை 4 மணியளவில் முகத்தினை மறைத்தவாறு தொப்பி அணிந்துகொண்டு கத்திகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் நிற்கும் நான்கு பேர் கொண்ட கும்பல் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வருகிறது.


அதிகாலையில் திருநெல்வேலி சந்தைக்கு மரக்கறி கொண்டு வருவோர் , இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் , பத்திரிகை விநியோகிக்கும் ஊழியர்கள் , தோட்டங்களுக்கு செல்வோர் உள்ளிட்ட அதிகாலை வேளைகளில் வேலைகளுக்கு செல்வோரை இலக்கு வைத்து இந்த கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றது.


இந்நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபையில் சாரதி , உள்ளிட்ட 6 ஊழியர்கள் மற்றும் யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றினை விநியோகத்திற்காக எடுத்து சென்ற ஊழியர் என 7 பேரிடம் இருந்தும் 70 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அவர்களின் பல ஆயிரக்கணக்கான பெறுமதி வாய்ந்த கையடக்க தொலைபேசிகள் என்பவற்றை கத்தி முனையில் வழிப்பறி கொள்ளையடித்துள்ளனர். 

சம்பங்கள் தொடர்பில் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
காவல்துறையினா் விரைந்து நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை கைது செய்தால் தான் தம்மால் அதிகாலை வேளைகளில் பயமின்றி வேலைகளுக்கு செல்ல முடியும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed