• Mi. Nov 6th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மாங்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்து!

Mai 21, 2022

மாங்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு புத்தளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசு வேன் இன்று அதிகாலை 12. 45 மணியளவில் மாங்குளம் பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் பின்பக்கமாக மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் உழவு இயந்திரத்தின் பெட்டியில் மின்விளக்குகள் சமிக்ஞைகள் இன்மையால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ் விபத்தில் சொகுசு வேனில் பயணம் செய்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed