• Mo. Sep 16th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிலிப்பைன்சில் கடுமையான நிலநடுக்கம்!

Mai 22, 2022

பிலிப்பைன்சின் பதங்காஸ் மாகாணத்தில் இன்று அதிகாலை 5.50 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி உள்ளது என ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இதுபற்றி பிலிப்பைன்சின் எரிமலை மற்றும் நிலஅதிர்வு அறிவியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்நிலநடுக்கம் கலாடகன் நகரில் இருந்து 21 கி.மீ. வடகிழக்கில் 132 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தெரிவித்து உள்ளது.

இந்த நிலநடுக்கம் மெட்ரோ மணிலா மற்றும் புலாகன் மற்றும் ஓரியண்டல் மிண்டாரோ மாகாணங்களிலும் உணரப்பட்டு உள்ளது. இதேபோன்று நேற்றிரவு 9.50 மணியளவில் புங்காஹன் பகுதியில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி இருந்தது. அந்த நிலநடுக்கம் புங்காஹனில் இருந்து 1 கி.மீ. கிழக்கு-வடகிழக்கில் 129 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. பசிபிக்கின் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ள பிலிப்பைன்சில் இதுபோன்று நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுவதுண்டு.

இதனால், ஏற்பட்ட பொருளிழப்புகள்உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed