• Mi. Nov 6th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாரெல்லாம் பைரவரை விரதம் இருந்து வழிபாடு செய்யலாம்.?

Mai 23, 2022

தேய்பிறை அஷ்டமியில் சிகப்பு நிற ஆடை அணிந்து, சிகப்பு நிற மலர்களால் அர்ச்சித்து, வெள்ளைப் பூசணியில் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வர மிகவும் நல்ல பலன்களை பெறலாம்.

ராகுகாலத்தில் 11 நெய் தீபம் ஏற்றி வழிபடுவதும், ருத்ராபிஷேகம் செய்தல், வடைமாலை சாற்றி வழிபடுவது நல்லது

தேய்பிறை அஷ்டமி என்பது பைரவருக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளை பைரவ வழிபாட்டிற்கு பயன்படுத்திக் கொண்டால் வாழ்வில் கடன் இல்லாத நிம்மதியை பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பைரவர் உடைய திருப்பாதாங்களில் வைக்கும் எலுமிச்சை பழத்திற்கு அதீத சக்திகள் இருப்பதாக ஐதீகம் உள்ளது. பைரவர் சாட்சாத் சிவபெருமானின் அம்சமாகவே பார்க்கப்படுகிறார். மேலும் அவர் சனீஸ்வரரின் குருவாக இருப்பதால் சனி தோஷம் இருப்பவர்களும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு செய்வது சனி பாதிப்புகளிலிருந்து குறைய செய்வதாக கூறப்படுகிறது.

அதிகமாக வாழ்க்கையில் கடன் வாங்கி பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளவர்களும், ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டக சனி என்று சனியின் வகை வகையான தோஷங்களில் பிடிபட்டுக்கொண்டு பல்வேறு துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் சனி தோஷக்காரர்களும் அவருடைய குருவாக விளங்கும் பைரவரை நாளைக்கு கோவிலுக்கு சென்று வணங்கி பாருங்கள்! நிச்சயமாக உங்களுடைய துன்பங்கள் குறையும்.

சிவ ரூபத்தில் இருக்கும் பைரவருக்கு மிகவும் பிடித்தமான நைவேத்தியம் தயிர் சாதம். தயிர் சாதத்தை நைவேத்யமாக செய்து கொண்டு கோவிலுக்கு சென்று பைரவருக்கு படைக்கலாம். அது போல் பைரவருக்கு செந்நிற மலர்கள் மிகவும் பிடித்தமானவை. செவ்வரளி, செம்பருத்தி போன்ற சிவப்பு நிற மலர்களை கொண்டு அர்ச்சனை செய்து வந்தால் பல விதமான தோஷங்களில் இருந்து நீங்கி அதிர்ஷ்டமான யோகங்களை பெறலாம்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed