எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி பேருந்து கட்டணத்தை 19.5 சதவீதத்தால் அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி பேருந்து பயணத்திற்கான குறைந்தபட்ச கட்டணம் 32 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது.  

உணவுப் பொதி ஒன்றின் விலை 10 ரூபாயால் அதிகரித்தது!

உணவகங்களின் என்கிற ஒன்றே இலங்கையில் முற்றாக இல்லாதொழியும் நிலைக்கு அரசாங்கம் உணவகங்களை தள்ளியுள்ளதாக தெரிவித்த அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத், எரிபொருள் விலைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதால் உணவக உரிமையாளர்கள் பாரியப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் எரிபொருள் விலை உயர்வுகளுக்கு இணையாக உணவுப் பொதி ஒன்றின் விலையை 10 ரூபாயால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Von Admin