வவுனியா புளியங்குளம் பகுதியில் சட்ட விரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்ட 910 லீற்றர் டீசல் நேற்று (24) புளியங்குளம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

அத்தோடு, சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யபட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா புளியங்குளம் பழையவாடி பகுதியில் டீசல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் சென்ற பொலிஸார் குறித்த வீட்டில் சட்டவிரோதமான முறையில் 910 லீற்றர் டீசலை கைப்பற்றியதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று (25) நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேலும் தெரிவித்தனர்.

Von Admin