கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் உள்ள பிரச்சினைகளைக் குறைப்பதற்கான மாற்றுத் தீர்வாகவும் நடவடிக்கைகளுக்காகவும் விமான நிறுவனங்கள் சென்னை, துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்படும் என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவிற்கு பயணத்தை மேற்கொள்ளும் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானங்கள் ஏற்கனவே சென்னை மற்றும் பிற இந்திய விமான நிலையங்களில் இருந்து தங்களிற்கான எரிபொருளை பெற்றுக்கொள்கின்றன என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இந்திய அதிகாரிகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். 

Von Admin