நாட்டில் எரிபொருளை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்ற நிலையில் யாழ் அச்சுவேலி எரிபொருள் நிலையத்தின் முன்மாதிரியன செயல்பாட்டுக்கு பலரும் பாராட்டுக்களை கூறிவருகின்றனர்.

நாடளாவிய ரீதியில் எரிபொருள் நெருக்கடி காரணமாக குறிப்பாக மோட்டார் சைக்கிளிற்கான பெற்றோலை பெற்றுக் கொள்வதற்கு மக்கள் பல மணித்தியாலங்கள் காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

இந்நிலையில் மக்களுக்கு இலகுவாக எரிபொருளை வழங்கும் நோக்குடன், யாழ்ப்பாணம் அச்சுவேலியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெண்களின் வேலைப்பழுவினை கருத்தில்கொண்டு அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்திலேயே நீண்ட வரிசையில் ஆண்களும் பெண்களும் பெற்றோலை பெறுவதற்கு காத்திருந்த வேளை, பெண்களை தனியாக வரிசைப்படுத்து அவர்களுக்கான எரிபொருள் துரிதமாக வழங்கப்பட்டது.

எனினும் இவ்வாறு பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதை எவரும் தவறுதலாக பயன்படுத்தி தமது தேவைக்கு அதிகமாக எரிபொருளை சேமிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அதேசமயம் அச்சுவேலி எரிபொருள் நிலையத்தின் இந்த முன்மாதிரியான செயற்பாடு பலரின் பாராட்டை பெற்றுள்ளது.   

Von Admin