யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரிப் பகுதியில் டிப்பர் வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த பாடசாலை அதிபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் முல்லைத்தீவு முத்தையன் கட்டு வலதுகரை முத்துவிநாயகர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் கந்தையா சத்தியசீலன் என்பவரே இன்று உயிரிழந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபரை எதிர் திசையில் தவறான பக்கத்தில் வந்த டிப்பர் வாகனம் மோதி தள்ளியது. 

ஏ – 09 நெடுஞ்சாலையில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிளை டிப்பர் வாகனம் மோதித் தள்ளியதால் விபத்து நிகழ்ந்திருந்தது