• Mi. Nov 6th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆப்பிரிக்காவில் கிராமத்தையே கொன்று குவித்த பயங்கரவாத கும்பல்!

Mai 29, 2022

ஆப்பிரிக்காவில் பயங்கரவாத குழுக்கள் அதிகரித்துள்ள நிலையில் கிராமம் ஒன்றையே பயங்கரவாத அமைப்பு ஒன்று சூறையாடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினா பாசோவில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் தோன்றி அபாயகரமான அளவில் வளர்ச்சியடைந்துள்ளன. இந்த பயங்கரவாத அமைப்புகளை அடக்க முடியாமல் புர்கினா பாசோ ராணுவமும் திணறி வருகிறது.

இந்நிலையில் அந்நாட்டின் கோம்பியா மாகாணத்திற்குள் புகுந்த பயங்கரவாத கும்பல் ஒன்று நள்ளிரவில் கிராமத்தையே சூறையாடியுள்ளது. அங்கிருந்த பொருட்களை அள்ளிக் கொண்டதுடன் அங்கிருந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 50க்கும் மேற்பட்டோரை துப்பாக்கியால் சுட்டும், பயங்கர ஆயுதங்களால் தாக்கியும் கொன்று குவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed