யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி சந்தியில் வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோர பேருந்து தரிப்பிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது.விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த அரியாலை நாயன்மார்கத்தை சேர்ந்த 32 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த நல்லூரைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

Von Admin