யாழ். நகரில் உள்ள இரு பிரபல நகைக் கடைகளில் பட்டப்பகலில் உரிமையாளர்களை ஏமாற்றி , நகைகள் அபகரிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள ஒரு நகைக் கடையில் இரு இளைஞர்கள் மோதிரம் கொள்வனவு செய்ய சென்றுள்ளனர்.

இதன்போது , உரிமையாளர் ஓர் தட்டில் இருந்த அனைத்து மோதிரங்களையும் எடுத்து காண் பித்த நிலையில் அதில் உள்ள வடிவங்கள் திருப்தி இல்லை என இளைஞர்கள் கூறியமையினால் கடையின் உள்ளே வேறு சில மோதிரம் இருக்கின்றன எனவும் அவற்றை எடுத்து வருவதாகக் கூறி உரிமையாளர் கடையின் உள்ளே சென்றுள்ளார்.

இதன்போது மேசையில் இருந்த தட்டில் காணப்பட்ட அத்தனை மோதிரங் களையும் தூக்கி கொண்டு அந்த இளஞர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பியோடியுள்ளனர்.

கடந்த வெள்ளியன்று இடம்பெற்ற இச் சம்பவத்தின்போது 9 பவுண் அபகரிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் கஸ் தூரியார் வீதியில் உள்ள நகைக்கடைக்குச் சென்ற பெண்கள் காப்புக் கொள்வனவு செய்வது போன்று பாசாங்கு செய்த சமயம் கடை உரிமையாளர்கள் அசந்தநேரம் 5 காப்புகளைத் தூக்கிகொண்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதனையடுத்து கடை பணியாளர்கள் நாலா புறமும் தேடியபோதும் களவாடியோடிய பெண்களைப் பிடிக்க முடியவில்லை. இந்த இரண்டு சம்பவங்களும் கடைகளின் சி.சி.ரி.வி. கமராக்களில் பதிவாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.