யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் வீட்டுக்கு பாண் வாங்கிக் கொண்டு சென்ற முதியவரிடமிருந்து 2 றாத்தல் பாணை இரு இளைஞர்கள் பறித்துச் சென்ற சம்பவம் நேற்று (31) மாலை இடம்பெற்றுள்ளது. 

கோண்டாவில் சந்தியில் இருந்து இராசபாதை நோக்கிப் பயணித்தவரிடமே நேற்று மாலை 6 மணியளவில் இவ்வாறு பாண் பறிக்கப்பட்டுள்ளது.

குறித்த முதியவர் பாண் வாக்கிகொண்டு வீடு நோக்கிப் பயணித்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த  இரு இளைஞர்கள் பாணை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர் என தெரியவருகின்றது. 

இது வெறும் செய்தியாக பார்க்கப்பட முடியாதது. தமிழர் தாயகத்தில் பொருளாதார நெருக்கடி எவ்வாறு உள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றது என அங்குள்ள சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

இனிமேல், வீதியால் உணவுப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கே அச்சப்படும் நிலை ஏற்படும். உணவுப் பொருட்களுக்காக பெரும் குற்றங்கள் கூட நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. 

Von Admin