யாழ்ப்பாணம் தென்மராட்சி – மிருசுவில் பகுதியில் 3 வயது சிறுமி ஒருவர் இன்று மாலை முதல் காணாமல் போயுள்ளார்.

மிருசுவில் வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் முற்றத்தில் சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியே காணாமல் போயுள்ளதாக சற்று முன்னர் தெரியவருகின்றது.

கபிலன் பவிதா (3 வயது) என்ற சிறுமியே இவ்வாறு இன்று (01) மாலை 5.30 மணிக்கு பின்னர் காணாமல் போயுள்ளார்.

இதையடுத்து குடும்பத்தார் மற்றும் அயலவர்கள் இணைந்து குறித்த பிரதேசத்தில் தேடுதல் நடத்தி வருகின்றனர்.

வீட்டிற்கு அருகாமையில் உள்ள பற்றை பகுதிக்கு செல்லும் வழியில் குழந்தையின் கால்தடம் என கருதப்படும் கால்த்தட அடையாளம் இனம்காணப்பட்டிருப்பதை அடுத்து குறித்த பகுதியில் தீவிர தேடுதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

அட்டுலுகம பிரதேசத்தில் 9வயது சிறுமி காணாமல் போயிருந்த நிலையில் சதுப்பு நில பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

அதனையடுத்து வவுனியா கணேசபுரம் பகுதியில் காணாமல் போயிருந்த 16 வயது சிறுமி மறுநாள் குறித்த காட்டு பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு நாட்டின் சில பகுதிகளில் சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில் மிருசுவில் வடக்கு பகுதியில் 3 வயது சிறுமி காணாமல் போயுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Von Admin