வவுனியா ஈரட்டை பெரியகுளத்தில் இன்று மாலை நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டனர். அத்துடன் இருவர் ஆபத்தான நிலையிலும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நான்கு மாணவர்களும் இணைந்து தமது வளர்ப்பு நாயை குளிப்பாட்டி நீராடிக் கொண்டிருந்தபோது நால்வரும் நீரில் முழ்கியதில் இருவர் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

ஏனைய இருவரும் மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்நிலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அயலவர்களின் உதவியுடன் குளத்தில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு இரு மாணவர்களின் சடலங்களை மீட்டுள்ளனர்.

உயிரிழந்த 15 மற்றும் 16 வயதான இரு மாணவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.  

Von Admin