இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் சகல மதுபானங்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவ்ல் வெளியாகியுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கான தீர்வை, நிதி அமைச்சினால் 100 சதவீதமாக அதிகரித்தமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வைன், விஸ்கி, ரம், ஜின், வொட்கா ஆகிய இறக்குமதி மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Vat வரி அதிகரிப்பு காரணமாக நேற்று முதல் அமுலாகும் வகையில் உள்ளூர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 520 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதோடு, பியர் போத்தல் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Von Admin